வயோதிபர்களுக்கு ஆதரவளிக்கும் பொதுநல மையத்தில் தீ 11பேர் பலி!!!

By Sindu

01 Feb, 2018 | 12:13 PM
image

வட ஜப்பானில் வயோதிபர்களுக்கு ஆதரவளிக்கும் பொதுநல மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5  பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் இன்று காலையும் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருவதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் சப்போரா நகரில் அமைந்துள்ள குறித்த மையம் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட மூன்று தளங்களை கொண்டதாகவும் இங்கு 16 வயோதிபர்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த 50 க்கும் 80 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வயோதிபர்களுக்கு ஆதரவளிக்கும் பொதுநல  மையம் உள்ளூர் பாதுகாப்பு விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52