இந்­திய –- தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் முத­லா­வது ஒருநாள் போட்டி இன்று டர்பன் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி தென்­னா­பி­ரிக்­காவில் சுற்­றுப்­ப­யணம் மேற்கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்­திய அணி 1–-2 என்ற கணக்கில் இழந்­தது. 

இதனைத் தொடர்ந்து இந்­தியா மற்றும் தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஆறு போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

முதல் 2 டெஸ்ட்களில் மோச­மாக ஆடித் தோற்ற இந்­திய அணி ஜோகன்னஸ்பர்க் மைதா­னத்தில் நடந்த கடைசி டெஸ்டில் வெற்­றி­பெற்­றது.

தென்­னா­பி­ரிக்­காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்­து­வது என்­பது இந்­தி­யா­வுக்கு சற்று சவா­லா­னதே.6 போட்­டி­களில் 4 போட்டிகளில் வென்றால் இந்­திய அணி தர­வ­ரி­சையில் முதல் இடத்தை பிடிக்கும்.

டெஸ்ட் தொடரை வென்­றது போல் ஒருநாள் தொட­ரையும் கைப்­பற்றும் ஆர்­வத்தில் தென்­னா­பி­ரிக்கா இருக்­கி­றது. சொந்த மண்ணில் விளை­யா­டு­வது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

தென்­னா­பி­ரிக்க அணியின் அதி­ரடி வீரர் டிவில்­லியர்ஸ் காயம் கார­ண­மாக முதல் 3 போட்­டி­களில் விளை­யா­ட­வில்லை. டிவில்­லியர்ஸ் இல்­லா­ததை இந்­தியா சரி­யாக பயன்­ப­டுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக  இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.