நாட­ளா­விய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளை யும் உள்­ள­டக்­கி­ய­தாக முன்­னெ­டுக்­கப்­பட்ட 4 மணி நேர விஷேட நட­வ­டிக்­கை­களில் 1670 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக, மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களின் நேரடி கட்­டுப்­பாட்டில் பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் வழி நடத்­தலில் இந்த சுற்றி வளைப்­புக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போதே இந்த 1670 பேரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

Image result for கைது

நேற்று முன் தினம் இரவு 11.00 மணி முதல் நேற்று அதி­காலை 3.00 மணி வரை இந்த சுற்றி வலைப்பு நட­வ­டிக்கை தொடர்ந்­த­தா­கவும் இதன்­போது நாட­ளா­விய ரீதியில் 1308 வீதிச் சோதனை சாவ­டிகள் தற்­கா­லி­க­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்டு அவற்றின் ஊடாக 20913 வாக­னங்கள் மற்றும்  42673 பேரை சோதனை செய்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட 1670 பேரில் 719 பேர் குடி­போ­தையில் வாகனம் செலுத்­திய குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் 554 பேர் சந்­தே­கத்தின் பேரிலும், பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த 397 பேரும் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்த விஷேட நட­வ­டிக்­கையின் போது நாட­ளா­விய ரீதியில் விஷ போதைப் பொருள் தொடர்­பி­லான 420 நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போது ஹெரோயின் 13.943 கிராமும் கஞ்ஞா 11.293 கிலோவும், வேறு போதைப் பொருட்கள் 176 மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சட்ட விரோத மதுசாரம் 3860 லீற்றர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.