சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்கான சமுத்திர நடவடிக்கைகள் தொடர்பான செயலகத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச இயந்திரமாக "The Contact Gror-tp on Piracy off the Coast of Somalia" எனும் அமைப்பு  செயற்பட்டு வருகின்றது. இவ்வமைப்பு 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். 

இவ்வமைப்பில்  இலங்கை ஆரம்பத்தில் இருந்து அங்கத்துவம் வகித்து வருகின்றது. அக்குழுவின் பணியை முறையாக  நிறைவேற்றுவதற்காக அதன் செயலகத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான  அவகாசம் தற்போது  கிடைக்கப் பெற்றுள்ளது. 

சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்கான சமுத்திர நடவடிக்கைகள் தொடர்பான செயலகத்தினை ஸ்தாபிப்பதற்கான  தகைமை இலங்கை கடற்படையினருக்கு காணப்படுவதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.