மாணவர்கள் உட்பட பதினேழு பேரைக் கொலை செய்த விவகாரத்தில் ‘நேவி சம்பத்’ என்பவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிப் பின்னர் கொலை செய்த விவகாரத்தில், கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆரச்சி அல்லது நேவி சம்பத் என்பவருக்குத் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதன் பேரில், அவரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். 

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்ய கோட்டை நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார். இந்த நிலையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

1977 பெப்ரவரி 9ஆம் திகதி பிறந்த சந்தேக நபர், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவின் மேற்பார்வை மையத்தின்  0112422176 எனும் இலக்கத்துக்கோ குற்றப் புலனாய்வுப் பிரிவின் 0112320141-45 எனும் இலக்கத்துக்கோ குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவின் 0112393621 எனும் இலக்கத்துக்கோ அறிவிக்க முடியும்.