கலிஃபோர்னியாவின் நியூபோர்ட் பீச் கடலோர நகரில் ஹெலிகொப்டரொன்று வீடொன்றில் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று  இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூவரும் ஹெலிகொப்டரில் பயணித்தவர்களா? அல்லது வீதியில் நின்றிருந்தவர்களும் உள்ளடங்குகின்றனரா? என்பது உறுதிபடுத்தப்படவில்லை என அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரில் பயணித்த நால்வர் மற்றும் வீதியில் நின்றிருந்த ஒருவர் உட்பட ஐவர் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நியூபோர்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.