கடவுள் அனு­மரை நினைத்து எனது மக­னுக்கு பெயர் சூட்­டினோம். அத­னால்தான், அனு­மாரை போலவே எனது மகனும் சிரஞ்­சீ­வி­யாக மர­ணத்தை ஜெயித்து வந்­துள்ளான் என்று பாது­காப்பு நட­வ­டிக்­கையின் போது பனிச்­ச­ரிவில் சிக்கி உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­பட்ட நிலையில் 6 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட இரா­ணுவ வீரர் ஹனு­மந்­தப்­பாவின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

ஹனு­மந்­தப்­பாவின் உற­வினர் ரமேஷ் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், எங்­க­ளது வேண்­டு­தலை கடவுள் காது கொடுத்து கேட்­டுள்ளார்.

ஹனு­மந்­தப்­பாவின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்­ளது. ஹனு­மந்­தப்பா உயி­ரோடு இருப்­ப­தாக வெளி­யா­கி­யி­ருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்­சியை தரு­கி­றது. அதே­நேரம் அரசு தரப்பில் இருந்து அவர் உயி­ரோடு இருப்­பது குறித்தும் மருத்­து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை குறித்தும் ஹனு­மந்­தப்பா குடும்­பத்­திற்கு தகவல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

தொலைக்­காட்சி செய்­தியை பார்த்­துதான், நாங்கள் அறிந்து கொண்டோம். தற்­போது ஹனு­மந்­தப்­பாவை சந்­திப்­ப­தற்­காக, டில்லி செல்­கிறோம் என்றார்.

மேலும் பனிச்­ச­ரிவில் சிக்கிக் கொண்டால் உதவி கிடைக்கும் வரை கருவில் இருக்கும் குழந்தை போன்று கை, கால்­களை மடக்கி மூச்சு விட வச­தி­யாக வாயின் அருகே லேசாக காற்றுப்பையை தோண்டி வைக்­கு­மாறு இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹனு­மந்­தப்பா விட­யத்தில் அவர் புதை­யுண்ட இடத்தில் இயற்­கை­யா­கவே காற்று துவாரம் இருந்­துள்­ளது.

அதா­வது அந்த ஆழத்­திலும் சிறு துவாரம் இருந்து அது வழி­யாக காற்று வந்­துள்­ளது. அத­னால்தான் ஹனு­மந்­தப்­பாவால் 6 நாட்கள் உயி­ருடன் இருக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹனுமந்தப்பா மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.