இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை இலங்கை மத்திய வங்கி  வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத்தாளை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடமிருந்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர பெற்றுக்கொண்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டமை தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது உத்தியோபூர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.