ஊவா மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமளிப்பதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை நாளை மறுநாள் 1ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமுகமளிக்குமாறு அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் தேர்தல் பிரச்சாரங்கள் இருப்பதாகவும் அதனால் குறித்த தினத்தில் சமுகமளிக்க முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதை நிராகரித்த ஆணைக்குழு, யதார்த்தபூர்வமான காரணங்கள் எதுவும் இன்றி விசாரணைக்கு சமுகமளிக்காது விட்டால் அது தண்டிக்கக்கூடிய குற்றமாகக் கருதப்படும் எனவும் குறித்த தினத்தில் அவர் சமுகமளிக்க வேண்டும் எனவும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.