சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் முகாமில், நபரொருவர் தனது அயல் வீட்டுச் சிறுமியை வீட்டினுள் அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்.

இதைக் கண்ட அரச சார்பற்ற நிறுவன ஊழியர் ஒருவர், சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.

தாயார் அளித்த புகாரின் பேரில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று (29) வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி, குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு அபராதமாக இரண்டு இலட்ச ரூபா செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.