முப்படையினரின் தொழிற் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு ஜனாதிபதி தலைமையில்…!

Published By: Robert

30 Jan, 2018 | 04:28 PM
image

முப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

பொதுமக்களின் நிதியை பெருமளவில் சேமிக்கும் வகையில் மிக வினைத்திறனுடன் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவரும் தொழிற்பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். 

மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் தற்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. 

முப்படையினரின் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினதும் திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படும் ”சிறிசர” செயற்திட்டத்தினதும் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறிசர செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 14 குளங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருப்பதுடன், மேலும் 10 குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. 

அத்துடன் அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு படை தலைமையகத்தின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

விமானப் படையினரின் தொழிற்பங்களிப்புடன் அநுராதபுரம் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சிறுநீரக மத்தியநிலையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் கடற்படையினரின்  தொழிற்பங்களிப்புடன் சிறுநீரக நோயினால் துயரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40