பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது.

குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை கூறுவதாக முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்டவே பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது.

இதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் தொலைப்பேசி இலக்கங்களை  கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ 350 யூரோ அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள 100% பெண்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் விரைவில் இந்த சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.