மரு­தானை புனித சூசை­யப்பர் கல்­லூரி அணிக்கும் யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி அணிக்கும் இடை­யி­லான 18 வய­துக்­குட்­பட்ட பாட­சா­லைகள் முதலாம் பிரிவு கால்­பந்­தாட்ட இறுதிப் போட்டி கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் இன்று பிற்பகல் நடை­பெ­ற­வுள்­ளது. 

இப் போட்டி பிற்­பகல் 3.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

நடப்பு சம்­பியன் புனித சூசை­யப்பர் அணி சம்­பியன் பட்­டத்தைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அதே­வேளை, நடப்பு சம்­பி­யனின் எதிர்­பார்ப்பை சித­ற­டித்து சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுப்­ப­தற்கு புனித பத்­தி­ரி­சியார் அணி முயற்­சிக்­க­வுள்­ளது.

இலங்கை பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட சங்கம் ஏற்­பாடு செய்­துள்ள அகில இலங்கை பாட­சாலை­க­ளுக்கு இடை­யி­லான 18 வய­துக்­குட்­பட்ட முதலாம் பிரிவு கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் 14 பாட­சாலை அணிகள் பங்­கு­பற்­றின.

புனித சூசை­யப்பர் அணி தான் விளை­யா­டிய சகல போட்­டி­களிலும் வெற்­றி­பெற்று இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளது.

மறு­பு­றத்தில் லீக் சுற்றில் ஒரே ஒரு போட்­டியில் மாத்­திரம் தோல்வியடைந்த புனித பத்­தி­ரி­சியார் அணி பிர­பல கல்­லூ­ரி­களை வெற்­றி­கொண்டு இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளது. 

லீக் சுற்றில் புனித பேது­ரு­வா­னவர் அணி­யிடம் தோல்வியடைந்த புனித பத்­தி­ரி­சியார் அணி, அரை இறு­தியில் 1–0 என வெற்­றி­பெற்று இறு­திக்கு முன்­னே­றி­யது.

ஜேசன் நிதேஷ் பெர்­னாண்டோ தலை­மை­யி­லான புனித சூசை­யப்பர் அணி, அசேல மது­ஷன்க (15 கோல்கள்), சாமத் ரஷ்­மித்த (11 கோல்கள்) ஆகிய இரண்டு வீரர்­களில் பெரிதும் தங்­கி­யி­ருக்­கின்­றது. இவர்கள் இரு­வரும் இன்­றைய போட்­டி­யிலும் புனித சூசை­யப்பர் அணியின் வெற்­றிக்­காக கடு­மை­யாக முயற்­சிப்பர் என நம்­பப்­ப­டு­கின்­றது.

எஸ். அபிஷான் தலை­மை­யி­லான புனித பத்­தி­ரி­சியார் அணியில் இடம்­பெற்ற முக்­கிய மத்­திய கள வீரரும் உதவித் தலை­வ­ரு­மான ஏ. பிரீசன் இன்றைய போட்­டியில் விளை­யா­டா­தது அவ்­வ­ணிக்கு பெரும் நெருக்­க­டியைக் கொடுக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

மத்­தி­யஸ்­தரின் அநா­வ­சி­யமான இரட்டை மஞ்சள் அட்­டைக்கு இலக்­கா­னதால் இறுதிப் போட்­டியில் விளை­யாடும் பிரீ­சனின் வாய்ப்பு பறிக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் ஏனைய வீரர்­களைக் கொண்டு சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரிப்­ப­தற்கு புனித பத்­தி­ரி­சியார் அணி முயற்­சிக்­க­வுள்­ளது.

இலங்கை பாட­சா­லைகள் கால்­பந்­தாட்ட சங்­கத்­தினால் நடத்­தப்­படும் இப் போட்­டி­களின் இறுதிச் சுற்­றுக்கு கிறிஸ்பின் பீரிஸ், ரொபர்ட் பீரிஸ் ஆகி­யோரின் ஆலோ­ச­னையில் றினோன் கழகம் பூரண அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது.

அணிகள் விபரம்

புனித சூசை­யப்பர்: ஜேசன் நிதேஷ் பெர்­னாண்டோ (அணித் தலைவர்), ஜே.ஜே.எஸ். குரும்­ப­லாப்­பிட்­டிய, அசேல மதுஷான், என்.எஸ். குறே, சாமத் ரஷ்­மித்த, எம்.பீ. மது­ஷன்க, என்.எம். கொடி­கார, ஜீ.சி. ப்ரமன்த, பி.எஸ். சத்­சர, எச்.ஏ.எஸ். சில்வா, டி.எம்.டி. டில்ஷான், எம்.எல். வாய்ஸ், என்.வீ. ஜோர்ஜ், எச்.பீ.ஜீ. திவன்க, டபிள்யூ.டி.எஸ். பிம்­சர, எம்.ரீ.கே. பெர்­னாண்டோ, ஜே.ஏ.எஸ். ரேனுஜ, பி.எல்.எஸ். பிங்கோ, மார்ஷல் ஜோன்சன், லுஷேன் டி சில்வா.

புனித பத்­தி­ரி­சியார்: எஸ். அபீஷன் (அணித் தலைவர்), டி.எச். ஹெய்ன்ஸ், ஆர். டிலக்ஷன், ஏ.எம். பியென் வேனு, ஏ.ஆர். கிஜுமன், எம்.ஆர்.யூ. ருபர்ட் தனுஜன், ஆர். சாந்தன், ஜே. நிர்மல கிறிஸ்டீபன், எம். மிகிர்ஷன், ஜே. ஜெயஉருத்திரன், என். சதீஸ், என். பவிராஜ், பி. செம்சன், ஏ. டெனீசன், ஜே. ஏ. அன்தனிதாஸ், எஸ்.யூ. பெனட் பீட்டர்சன்.