கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளநிலையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர்.

இதன்போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு