முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை வழங்­கி­யமை குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அதி­ருப்தி வெளி­யிட்­டுள்ளார்.

சரத் பொன்­சே­கா­விற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை வழங்­கி­யமை குறித்து ஊடகம் ஒன்று எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த போதேத மஹிந்த ராஜ­பக் ஷ இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

சரத் பொன்­சே­காவை விடவும் பாரா­ளு­மன்றப் பத­வியை வகிக்கத் தகு­தி­யான பலர் இருக்­கின்­றார்கள். சரத் பொன்­சே­கா­விற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கப்­ப­டு­வ­தனால் அதி­க­ளவில் பாதிப்­புக்­களை ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்­நோக்க நேரிடும்.