கிழக்கு பாகிஸ்­தானில் கார் ஒன்றின் மீது பெற்­றோ­லிய எரி­வாயு தாங்கி வாக­ன­மொன்று புதன்­கி­ழமை மோதி தீப்­பற்றி எரிந்­ததில் 6 சிறு­வர்கள் உட்­பட குறைந்­தது 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த விபத்தின் போது அந்த வாக­னங்­க­ளுக்கு அருகே சிறு­வர்கள் பய­ணித்த இரு இழுவை வண்­டிகள், கார்கள் மற்றும் இரு மோட்டார் சைக்­கிள்கள் உள்­ள­டங்­க­லான வாகனங்கள் தீப்­பற்றி எரிந்­துள்­ளன.

பஞ்சாப் மாகா­ணத்தில் ஷெய்­கு­புர மாவட்­டத்­தி­லுள்ள சந்தடி மிக்க நெடுஞ்­சா­லையில் இடம்­பெற்ற இந்த விபத்தில் 17 பேருக் கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் இந்த சம்­பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.