கட­வுளை வேண்­டிக்­கொள்­வதன் மூல­மா­கவோ அல்­லது தேங்காய் உடைத்து பக்­தி­ம­ய­மாக செயற்­ப­டு­வதன் மூல­மா­கவோ ஊழல் மோச­டிக்­கா­ரர்கள் தப்­பிக்­கவும் முடி­யாது. ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை எந்தக் கட­வுளும் காப்­பாற்­றவும் மாட்டார் . அதேபோல் திரு­டிய தேங்­காய்­களை உடைத்து ஆல­யத்தில் வழி­ப­டு­வது கூட ஒரு விதத்தில் ஊழல் தான். அதற்கு கடவுள் இடத்­தில தண்­டனை உண்டு என அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

அர­சாங்கம் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலத்தில் அர­சாங்கம் மேற்­கொண்ட பாரிய ஊழல் மோச­டிகள் தொடர்பில் மக்கள் மத்­தியில் மிகப்­பெ­ரிய முரண்­பா­டுகள் எழுந்­தன. அதன் விளை­வாக குறித்த காலத்தின் முன்­னரே முன்­னைய அர­சாங்­கத்தை விரட்­டி­விட்டு புதிய ஆட்­சி­யொன்றை மக்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர். இந்த நல்­லாட்சி அர­சாங்கம் தமது கடை­மை­களை பொறுப்­பேற்­ற­வுடன் ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை கண்­ட­றிந்து அதற்­க­மைய சுயா­தீ­னத்தை நிலை­நாட்டும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­தது. குறிப்­பாக இந்த அர­சாங்கம் நிதிக் குற்றப் புல­னாய்வு பிரிவை ஆரம்­பித்து அத­னூ­டாக குற்­ற­வா­ளி­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பித்­தது.

இந்த நட­வ­டிக்­கையில் பல்­வேறு தரப்­பி­னரை அழைத்து அவர்­களின் வாக்­கு­மூ­லங்­களை பெற்­றுக்­கொண்­டது மட்­டு­மல்­லாது குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யாளம் காட்டப்­பட்ட அல்­லது சந்­தே­கப்­படும் நபர்­களை கைது­செய்து அதி தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­முள்­ளது. இந்த நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும். இந்த நிதிக்­குற்றப் புல­னாய்வு செயற்­பா­டா­னது எந்த அர­சியல் தலை­மை­யி­னதும் தலை­யாட்டி பொம்மை செயற்­பாடோ அல்­லது பணத்தை வைத்து விளை­யாடும் விளை­யாட்டோ அல்­லது தனிப்­பட்ட வகையில் எவ­ரையும் பழி­வாங்கும் நட­வடிக்­கையோ அல்ல.

இந்த நிதிக் குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு வரும் முறைப்­பா­டுகள் அனைத்­துமே பொது­மக்கள் மூல­மா­கவும் அதேபோல் சிவில் அமைப்­புகள் மூல­மா­கவும் முன்­வைக்கும் குற்­ற­ச்சாட்­டுக்­க­ளே­யாகும். ஆகவே, இதில் முழு­மை­யாக பொது­மக்­களின் தலை­யீ­டு­களே உள்­ளன. இதில் கடந்த கால ஊழல் மோச­டி­களை கண்­ட­றிந்து அதற்­க­மைய யார் குற்­ற­வா­ளி­களோ அவர்­களை தண்­டிப்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும்.

மேலும் இந்த குற்­றச்­சாட்­டு­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­ன­வுடன் மன­த­ளவில் அச்­சப்­படும் சிலர் ஆல­யங்­களில் தேங்­காய்­களை உடைத்து தமது பக்கம் கட­வுளை அழைத்து தமது பாது­காப்பை பலப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். கட­வுளை வேண்­டிக்­கொள்­வதன் மூல­மா­கவோ அல்­லது தேங்காய் உடைத்து பக்­தி­ம­ய­மாக செயற்­ப­டு­வதன் மூல­மா­கவோ உண்­மை­களை மறைக்க முடி­யாது. அதேபோல் எந்த கடவுளை வேண்­டி­க் கொண்­டாலும் இந்த ஊழல் மோச­டிக்­கா­ரர்கள் தப்­பிக்­கவும் முடி­யாது. ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை எந்தக் கட­வுளும் காப்­பாற்­றவும் மாட்டார். அதேபோல் ஆலயத்தில் திரு­டிய தேங்­காய்­களை உடைத்து வழி­ப­டு­வது கூட ஒரு விதத்தில் ஊழல் தான். அதற்கு கடவுள் இடத்­தில தண்­டனை உண்டு.

மேலும் இன்று தமது இருப்பை தக்­க­வைக்கும் முயற்­சியில் இன­வாத கருத்­துக்­களை பரப்பும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதன் ஒரு செயற்­பா­டா­கவே தேசிய கீதத்தில் இன­வாத கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றனர். தேசிய கீதம் தமிழில் இசைப்­பது ஒன்றும் இன­வாத செயற்­பாடு அல்ல. தமக்கு தெரிந்த மொழியில் தேசிய கீதத்தை இசைப்­பதன் மூல­மா­கவே இந்த நாட்டை உண்­மை­யாக நேசிக்க முடியும். அதேபோல் சிங்­க­ளத்தில் பாடினாலோ அல்லது தமிழில் பாடுவதனாலோ தேசிய கீதத்தின் அர்த்தம் மாறப்போவதில்லை. தமிழ் மக்கள் தமக்கு இலகுவான வகையில் இசைக்க அனுமதிப்பது அவர்களையும் அவர்களின் செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாகவே அமையும். எனினும் அரசியல் அனாதைகளாக இன்று இருப்பவர்கள் தமது இருப்பை தக்கவைக்கும் நோக்கத்தில் இனவாதத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றார் .