எம்.எம்.மின்ஹாஜ்

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றது. எனினும் சுதந்திரக் கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டு வருகின்றனர். இதன் ஊடாக மக்களை திசைத்திருப்ப பார்க்கின்றனர் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Image result for ரவி கருணாநாயக்க

தயாசிறி ஜயசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் நிறுவனமே  லொத்தர் சீட்டு அச்சிடும் பணிகளில் ஈடுப்பட்டு வந்தன. இதன்போது அதிக விலைக்கு லொத்தர் சீட்டு அச்சிடப்பட்டது. இதனை நிறுவனத்தை தடை செய்தேன். இந்த நிறுவனத்தினால் 2000 மில்லியன் நட்டம் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்குளியில் இன்ற நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.