பல்­வேறு துறை­களில் அசத்தி வரும் ‘ரோபோ’க்கள் தற்­போது மனி­தர்கள் செய்யும் ஊழலை கண்­டு­பி­டிக்­கவும் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. அத்­த­கைய ‘ரோபோவை ஸ்பெயின் நிபு­ணர்கள் தயா­ரித்­துள்­ளனர்.

அந்­நாட்டில் உள்ள வல்லா போலித் பல்­க­லைக்­க­ழகம் இந்த அரிய கண்­டு­பி­டிப்பை நிகழ்த்­தி­யுள்­ளது. செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்பம் மூலம் இந்த ரோபோ உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ‘ரோபோ'விடம் நாம் சந்­தே­கப்­படும் வியா­பாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் நடந்து இருக்­கி­றதா? இல்­லையா? என்­பதை அது  கண்­ட­றியும்.

இந்த ‘ரோபோ'வில் இது­வரை நடந்த பல்­வேறு ஊழல்கள் குறித்த தக­வல்கள் உள்­ளன. அதையும், நாம் கொடுக்கும் தக­வ­லையும் அது சரி­பார்க்கும். அதே போன்று அந்த தலை­வர்­களின் வாழ்க்கை வர­லாறு, அந்த கட்­சியின் செயல்­பாடு, அவர் பேசி­யது, அந்த ஊழல் குறித்து அவர் கூறி­யது என அனைத்­தையும் அந்த ரோபோ சரி­பார்க்கும். 

இதன்­மூலம் ஊழல் கண்­டு­பி­டிக்­கப்­படும்.

தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டுள்ள ‘ரோபா ’வில் ஸ்பெயினில் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தக­வல்கள் ‘மெம­ரி’யில் ஏற்­றப்­பட்­டுள்­ளன. ஐரோப்பாவில் நடந்த பெரிய குற்றங்கள் குறித்த தகவலும் அதில் பதிவேற்றப்பட்டுள்ளது.