தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்யில் 69 ஓட்டங்கள் திரில் வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இடம்பெற்று வந்தது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிற்காக 187 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
விராட் கோலி 54 ஓட்டங்களையும் புஜாரா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 194 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அம்லா 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
7 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இந்தியா தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களை பெற்றிருந்தது, முரளி விஜய் 13 ஓட்டங்களுடனும் லோகேஷ் ராகுல் 16 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.
42 ஓட்டங்களுடன் தொடர்ந்து 3 ஆவது நாளில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.
முரளி விஜய் 127 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். கோலி 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாண்டியா 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய ரகானே 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷம்மி அதிரடியாக விளையாடினார். அவர் 27 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்க அணி பந்துவீச்சில் வெர்னான் பிளாண்டர், ககிசோ ரபாடா, மோர்னே மார்கல் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.
இதையடுத்து தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்க்ராமும் களமிறங்கினர்.
மார்க்ராம் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஷம்மி பந்தில் பார்தீவ் பட்டேலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹாசிம் அம்லா களமிறங்கினார். தென்னாபிரிக்க அணி 8.2 ஓவர்களில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வெற்றிக்கு 224 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அம்லாவும் எல்கரும் நிதானமாக விளையாடினர். நேற்று ஆடுகளம் அபாயகரமாக இருந்தது. இருப்பினும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக ஆடுகளம் சற்று ஈரமாக இருந்ததால், இன்று பந்து பெரிய அளவில் எகிறவில்லை. இது தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது. அம்லா - எல்கர் இணைந்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.
இன்றைய நாள் ஆட்டத்தின் இரண்டாவது 2 ஆவது பாதியில் அம்லா ஆட்டமிழந்தார். அவர் 52 ஓட்டங்களில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டி வில்லியர்ஸ் 6 ஓட்டங்களுடனும் டூ பிளஸ்சிஸ் 2 ஓட்டங்களுடனும் டீ காக் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்தனர். வெர்னான் பிளாண்டர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பெஹ்லுக்வாயோ, ரபாடா, மோர்னே மோர்கல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து நிகிடி களமிறங்கினார். நிகிடி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்க அணி 177 ஓட்டங்களைப் பெற்றபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்டவீரராக களமிறங்கிய டீன் எல்கர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்திய அணி பந்துவீச்சில் மொகமது ஷம்மி ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்ரிக்க அணியின் வெர்னான் பிளாண்டர் தொடர்நாயகன் விருது பெற்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM