உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணமே உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பு வெயிளிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான  தேர்தல் வன்முறை சம்பவங்களும் அது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அறிக்கையில் மேலும்,

தேர்தல் தொடர்பான 557 முறைப்பாடுகளும்,  தேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவற்றில் 84 வன்முறையுடன் தொடர்புடைய சம்பவங்களும், 98 தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடைய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.மேலும் பதிவாகியவற்றில் 15 சம்பவங்கள் வைத்திய சாலையுடன் தொடர்புடையவையாகும். 

கடத்தல்  சம்பவம் தொடர்பாக 1 முறைப்பாடும்,அச்சுறுத்தலுடன் தொடர்புடைய ஒரு முறைப்பாடும், கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விழைவித்தமை தொடர்பாக 7 முறைப்பாடுகளும் , வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பாக 6 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. 

சட்ட விரோத கட்சி காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக 22 முறைப்பாடுகளும், சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக 172 முறைப்பாடுகளும் , கட்டாயப்படுத்தி வாக்களிக்க அச்சுறுத்தியமை தொடர்பில் 13 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதும், வெடிபொருள் பயன்படுத்தலுடன் தொடர்புடையதான சம்பவங்களோ, முறைப்பாடுகளோ பதிவாகவில்லை. என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.