ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காபூலிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை இலக்குவைத்து இன்று குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

அம்பியூலன்ஸ் வண்டியில் மறைத்துவைத்து கொண்டுவரப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை அண்டி ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உயர் சமாதான அலுவலகம், ஆப்கானிஸ்தானின் பழைய உட்துறை அமைச்சுக் கட்டடம், வெளிநாட்டுத் தூதரங்கள் ஆகியவை அமைந்துள்ளன.

இதேவேளை இந்தக் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பினர், தாமே குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.