நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி அவரது அண்ணன் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து பேசவுள்ளார்.

அதனை தொடர்ந்து அப்துல் கலாம் படித்த பாடசாலைக்கு சென்று அங்கு மாணவர்களை சந்தித்து பேசியதன் பின்னர்  மீனவர்களை சந்தித்து குறைகேட்டு விட்டு அப்துல் கலாம் நினைவகத்துக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.

பெப்ரவரி 21ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தொடங்கும் கமல்ஹாசன், அன்று கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது