மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலை, கிண்ணியா பகுதியில் இன்று பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினால் கீழே வீசி எறியப்பட்ட இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளாகி மயங்கிய நிலையிலேயே கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.