எதிர் வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ச்சியாக இரண்டு மாத காலத்திற்கு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான  ரயில் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தப் போவதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் இருக்கின்ற பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயில் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.