யுவதி ஒரு­வரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ள குற்­றச்­சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யவில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடக பிரிவு  தெரி­வித்­துள்­ளது.

அங்­கு­ணு­கொ­ல­ப­லஸ்ஸ பிர­தே­சத்தைச் சேர்ந்த 27 வய­து­டைய ஆணொ­ரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அம்­பாந்­தோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய யுவதி ஒரு­வ­ரினால் சிறுவர் மற்­றும்­ பெண்கள் பணி­ய­கத்­திற்கு செய்­யப்­பட்ட  முறைப்­பாட்­டுக்­க­மை­யவே குறித்த இளைஞர் நேற்று தங்­காலை பிர­தேச சிறுவர் மற்றும் பெண்கள் பணி­யக விசேட விசா­ரணை பிரி­வி­னரால் கைது­ செய்­யப்­பட்டார்.

இவ்­வாறு கைது ­செய்­யப்­பட்ட குறித்த சந்­தே­க­நபர் நேற்று மாலை தங்­காலை நீதவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே தங்­காலை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி பெப்­ர­வரி 2 ஆம் திகதி வரையில் குறித்த சந்­தே­க­ந­பரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். 

மேலும் பாதிக்­கப்­பட்ட யுவ­தியின் குறித்த முறைப்­பாட்டில்  தனது அனு­ம­தி­யில்­லாமல் தனது புகைப்படங்கள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை காதலன் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.