பதுளை மாநகர சபைக்காக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  சார்பில் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்   போட்டியிடும் நடேசன் வெள்ளக்கண்ணன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சபை உறுப்­பி­னர்­க­ளான ஆறு­முகம் கணே­ச­மூர்த்தி மற்றும் உபாலி சேனா­ரட்ண ஆகியோர்  நேற்று முன்­தினம் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். 

இந்த சம்­பவம் தொடர்­பாக பதுளை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களை அடுத்து நீதி­மன்றில்  நீதிவான் சுஜீ­வ­ன­த­சில்வா முன்­னி­லையில்  விளக்­க­ம­ளித்­தனர். இதன்­போது அன்­றைய சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­தா­கக்­கூறி, ஐக்­கி­ய­ மக்கள் சுதந்­தி­ர­முன்­னணி யில்  பதுளை மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில்  போட்­டி­யிடும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வேட்பாளர் நடேசன் வெள்ளக்­கண்ணன் உட்­ப­ட­ ஐவர் பதுளை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக நீதி­மன்றில் பொலிஸார் தெரி­வித்­தனர். 

குறித்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அடுத்து நீதி­பதி பதுளை பொது வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று அறு­வரையும் பார்­வை­யிட தீர்­மா­னித்தார். அதன் பின் நேற்­று­மாலை மீண்டும் குறித்­த­ ம­னு­வி­சா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. 

இதன்போது  ஐவ­ரையும் தலா ­பத்­தா­யிரம் ரூபா  ரொக்கப் பிணை­யிலும்  ஒரு இலட்சம் ரூபா  பெறு­ம­தி­யான சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­விக்­கு­மாறு  உத்­த­ர­விட்­ட­துடன் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைத்தார்.    

இந்த சம்­பவம் தொடர்­பாக 314/ 316தண்­டனைக் கோவை­சட்­டத்தின் கீழ் பது­ளை­பொ­லிஸார் நீதி­மன்றில் விளக்­க­ம­ளிக்­கை யில், சம்­பவத் தினத்­தன்று ஊவா­மா­காண சபை எதிர்க்­கட்சித் தலைவர் ர.மு.ரத்­னா­யக்­க­மற்றும் ஆறு­முகம் கணே­ச­மூர்த்தி, உபா­லி­ சே­னா­ரட்ன ஆகியோர் ஊவா­ மா­காண சபை நுழை­வா­யினுள் ஜீப் வண்­டியில் வந்­து­கொண்­டிருந்­த­வே­ளையில் அங்கு வந்­தி­ருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திடீரென குறித்த மாகாண சபை உறுப்பினர்களை  தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது  என்று மன்றில் தெரிவித்தனர்.