தபால்மூல மதிப்பீட்டு நேரங்களில் எவரேனும் குழப்பங்களை விளைவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூன்று மாதங்களேனும் பிட்போடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

மக்களின் வாக்களிப்பே பிரதானமானது. அதனை அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகள் எதிர்வரும்  மாதம் முதல் வாரங்களில் இடம்பெறும். 

இந்நிலையில்  தேர்தல் மதிப்பிடும் நேரங்களில் அல்லது அதன்போது குழப்பங்களின் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள்  ஏற்படுத்தப்படுமாயின் அல்லது வாக்கெண்ணும் நிலையங்களில் எவரேனும் குழுக்களை மூலமாக தகராறுகள் விளைவித்தல் அதன் மூலமாக எமது உறுப்பினர்கள் அச்சுற்தப்படும் வகையில்  நாட்டின் நிலைமைகள் வீழ்ச்சியடையும் என்றால் உடனடியாக தேர்தல் மதிப்பீடுகள் நிறுத்தப்படும்.

மேலும் இதனை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போடவும் நேரிடும். இவ்வாறான நிலைமைகளில்  குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிட்போட நேரிடும். இது குறித்து கட்சி உறுப்பினர்கள் சந்திப்பின் போதும், பிரதிநிதிகளின் சந்திப்பின் போதும் நான் இதனை தொடர்ச்சியாக தெரிவித்துள்ளேன். 

ஆகவே அனைவரும் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அரசியல் கொள்கைகள் என்னவாக இருந்தாலும் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவிடம் வெளிபடுத்தக்கூடாது. நாம் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றோம்.

அதேபோல் வாக்களிக்கும் உரிமைகள் மக்களை சார்ந்தது. அவர்களின் வாக்குகளே அனைத்தையும் தீர்மானித்து வருகின்றது. ஆகவே அதற்கு சகல அரசியல் கட்சிகளும் மதிப்பளித்து செயற்பட வேண்டும். மக்களை கஷ்டப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் எவரும் முன்னெடுக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.