தேவி ஜூவலர்ஸின் “Drops of Life”இரத்ததான முகாம்  2018

Published By: Priyatharshan

26 Jan, 2018 | 11:17 PM
image

ஐந்து தசாப்த காலத்துக்கும் மேல், கைகளால் செய்யப்பட்ட கலை நேர்த்திமிக்க தங்க ஆபரணங்கள் தொடர்பாக நிரூபிக்கப்பட்ட விசேடத்துவத்துடன் தேவி ஜூவலர்ஸ் இலங்கையின் முதற்தரமானதும் அதிக வரவேற்பைப் பெற்றதுமான வர்த்தகநாமம் என்ற இடத்தை தனதாக்கியுள்ளது.

கொழும்பு 11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள தேவி ஜூவலர்ஸின் தன்னிகரற்ற கண்கவர் காட்சியகம் எவ்வித வேறுபாடுமின்றி நாட்டிலுள்ள அனைவரதும் அபிமானத்தையும் பெற்ற ஒன்றாகும். 

தமது தனித்துவமான, கலைநேர்த்தி மிக்க நகைகள் மற்றும் சேவைகளுடன் மாத்திரம் நின்றுவிடாது “தேவி ஜூவலர்ஸ் - Bangle Mela”,  “தேவி ஜூவலர்ஸ் - அக்ஷய திருதியை” மற்றும் “தேவி ஜூவலர்ஸ் – Exchange Mela” போன்ற நாடளாவிய ரீதியில் அதிகளவு எதிர்பார்க்கப்படும் வருடாந்த நகை சலுகை விழாக்களை தேவி ஜூவலர்ஸ் நடாத்தி வருகின்றது. 

தமது செயற்பாடுகளை இலங்கையில் மேலும் விஸ்தரிக்கவுள்ள தேவி ஜூவலர்ஸ், சாத்தியமான புதிய வாடிக்கையாளர்கள் பற்றி கவனம் செலுத்தி வருவதோடு, தமது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளைத் தொடர்ந்தும் வழங்கி அவர்களது மனங்களில் நிலைத்திருப்பதற்கும் எதிர்பார்த்துள்ளது.

தேவி ஜூவலர்ஸ் தனது 52 வருட பெருமைமிகு பயணத்தில் “Drops of Life” எனும் இரத்ததான முகாமை இம்முறை ஒழுங்கு செய்திருப்பதன் ஊடாக புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றது. 

அவசியமான வளங்களைப் பெற்றுத்தந்து எமது சமூகத்தை தரமுயர்த்தி சக்தியூட்ட வேண்டுமென்ற ஆர்வமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் என்ற வகையில் “Drops of Life” இரத்ததான முகாம் தேவி ஜூவலர்ஸின் வருடாந்த சமூகப் பொறுப்பு செயற்பாடுகளில் ஒன்றாக இணைந்துகொள்ளும்.

தேவி ஜூவலர்ஸ் “Drops of Life” இரத்ததான முகாம் 2018 ஜனவரி 31 ஆம் திகதி, புதன் கிழமை (போயா தினம்) Girls’ Friendly Society மண்டபத்தில் (இல.58, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கொழும்பு 03) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெறும். 

தேவி ஜூவலர்ஸ் “Drops of Life”  இரத்ததான முகாமானது, இலங்கை தேசிய இரத்த மாற்றுகை சேவை, Girls’ Friendly Society Hall, Sri Lanka (உத்தியோகபூர்வ நிகழ்விடப் பங்காளர்கள்) மற்றும் வீரகேசரி மற்றும் சியதெச (உத்தியோகபூர்வ அச்சு ஊடகப் பங்காளர்கள்) ஆகியோரின் கூட்டிணைப்பில் நடைபெறவுள்ளது.

வாழ்வெனும் விலை மதிப்பில்லா வரத்தைப் பாதுகாக்கும் மகத்தானதொரு காரியத்தில் இணைந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் தேவி ஜூவலர்ஸ் அன்புடன் அழைக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03