தங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் இளம் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை நீதிமன்றில் ஹஷினியை ஆஜர் படுத்திய போதே தங்காலை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும்  அந்த காலப்பகுதியில் வங்கில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹஷினி ரத்நாயக்க கடந்த 9ஆம் திகதி தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

இதையடுத்து பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஹசினி ரத்நாயக்க பிரபல சிங்கள மொழிப் பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் இரண்டாவது இளம் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.