போலி வாக்குச் சீட்டுகளுடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி  பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர்  ஒருவரே சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் நேற்று தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கரைச்சி பிரதேச சபைக்கு  பரந்தன் வட்டாரத்தில்  போட்டியிடுகின்ற  வேட்பாளர் ஒருவரே இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார்.

பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நிலையம் ஒன்றை அலுவலகமாக பயன்படுத்தியமை மற்றும் போலி மாதிரி வாக்கு சீட்டுக்களை வைத்திருந்தமை போன்ற காரணங்களால் கைது செய்யப்பட்டு  கிளிநொச்சி  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் . 

அத்தோடு அவரிடம் இருந்த போலி வாக்குச்  சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.