புனேயில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபது20 போட்டித் தொடர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் 118 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.