பங்களாதேஷ் அணிக்கெதிரான முக்கிய போட்டியொன்றில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடும் முக்கோணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது.
இத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் 2 தடவைகள் போட்டியில் மோதின. மொத்தமாக ஒவ்வொரு அணிக்கும் 4 போட்டிகள் இடம்பெற்றன.
தொடரின் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி 15 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், வெற்றிபெற்ற ஓட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் சிம்பாப்வே அணி 2 ஆவது இடத்தில் இருந்ததால் இலங்கை அணிக்கு இப் போட்டி வாழ்வாசாவா போட்டியாக அமைந்தது.
தொடரின் 6 ஆவது போட்டியும் இறுதிப் போட்டியாயுமாக அமைந்த இப்போட்டி பங்களாதேஷின் டாக்காவில் இன்று பகலிரவுப் போட்டியாக அமைந்தது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சிம்பசொப்பனமாகத் திகழ 82 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷின் ஆட்டம் அடங்கியது.
பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் 26 ஓட்டங்களையும் சபீர் ரஹ்மான் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஏனையோர் ஒன்றை இலக்கதுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லக்மால் 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமிர, திஸர பெரேரா மற்றும் சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 83 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை துடுப்பெடுத்தாடி எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணதிலக 35 ஓட்டங்களையும் தரங்க 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இவ் வெற்றியுடன் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
இறுதிப்போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி டாக்காவில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM