‘சமீபத்தில் நாங்கள் விளையாடிய ஆடுகளங்கள் போன்று இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது. சொல்லப்போனால் இங்கிலாந்து ஆடுகளங்கள் போன்று காணப்பட்டது என இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியில் தோல்வியடைந்தமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.புனே ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்தன. இதனால் பந்துகள் விதவிதமாக பவுன்ஸ் ஆனது. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் இதைவிட சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருக்க வேண்டும்.   130 முதல் 135 ஓட்டங்களை எடுத்திருந்தால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இலகுவாக இருந்திருக்கும். எனினும் அடுத்த போட்டியில் கடுமையான அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.