முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் தபால் ஊழியர் இல்லாத காரணத்தால் வழக்கமாக கிராம வாசி ஒருவரிடம் கடிதங்களை வழங்கியே மக்களுக்கு விநியோகிப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்த தபால் ஊழியரும் குறித்த பகுதிக்கான வாக்காளர் அட்டைகளையும் கிராம வாசி ஒருவரிடம் கொடுத்து மக்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்ட 288 வாக்காளர் அட்டைகளும் ஒரு வீட்டில் இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிசார், தேர்தல் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று வாக்குச்சீட்டுக்களை மீட்டுள்ளதுடன் தபால் ஊழியர் மற்றும் குறித்த கிராம வாசியையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM