கோட்டா கைது தொடர்பில் நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு !!!

Published By: Digital Desk 7

25 Jan, 2018 | 03:20 PM
image

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவின் தந்தை டீ. ஏ ராஜபக்‌ஷவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும், நினைவு காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கும் அரச நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்து குற்றவியல் விசாரணை பிரிவு கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தது.

குறித்த குற்றச்சாட்டை எதிர்த்து கோட்டபாய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கோட்டபாய  தாக்கல் செய்த மனுவிற்கமைய அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரகசிய காவல் துறையினருக்கு இன்று வரை மேன்முறையீட்டு நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விதிக்கப்பட்ட  இடைக்கால தடையுத்ததடையுத்தரவு  தொடர்ந்து நீடிப்பதா? நிராகரிப்பதா? தொடர்பிலான மீள் விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற மீள் விசாரணையின் போதே குறித்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர் வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்

2025-06-24 13:24:21
news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38