(இரோஷா வேலு)

2008 - 2014 காலப்பகுதியில் மத்திய வங்கியில் பிணைமுறி மாத்திரமல்ல எதுவிதமான மோசடிகளும் இடம்பெறவில்லை. இக்காலத்தில் காணப்பட்ட மத்திய வங்கியின் சட்டத்திட்டங்களே அதற்கான காரணம். ஆகவே, இந்த சட்டங்களை மாற்றி நிதியமைச்சரின் கீழ் இருந்த மத்திய வங்கியின் பொறுப்பினை பிரதமரின் அதிகாரித்தின் கீழ் கொண்டுவந்தார்கள் அதன்பின்னரே இந்த பிணைமுறி மோசடிகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்தார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான நாட்டுப்பற்று வல்லுனர்களின் கருத்துக்களம் இன்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.