எல்லைமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 8 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீர்வளதிணைக்கள யாழ். பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். 

Image result for இந்திய மீனவர்கள் கைது

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லைமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த எட்டு இந்திய மீனவர்களை இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட வந்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் இந்திய தமிழ்நாட்டில் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்யும் வேளையில் இரண்டு ரோலர் வகை படகுகளும் மீன்பிடிக்க பயன்பட்ட இரண்ட வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 பேரையும் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். 

மேலும் இவ்வார இறுதியில் 98 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சட்டமா அதிபரின் அறிவித்தல் வருவரையில் இவர்  சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட 84 மீனவர்களுடன் இவ்வாண்டில் கைதாகிய மீனவர்கள் 29 மற்றும் இன்று கைதாகிய 8 ‍பேருடன் இதுவரையில் மொத்தமாக 141 ‍பேர் சிறையிலுள்ளனர்  என்றார்.