மத்திய அமெரிக்காவில் உள்ள சால்வடோர் நாட்டில் நடந்த ஒரு பெஷன் ஷோவின் போது திடீரென மொடல் அழகி ஒருவரின் உடையில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வண்ண வண்ண விளக்குகளுக்கு இடையே ஒரு மொடல் அழகி வெறும் இறகுகளால் ஆன ஆடையை அணிந்து பெஷன் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது அவருடைய உடையின் ஒரு பகுதி அங்கு எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு ஒன்றில் பட்டதனால் அவர் அணிந்திருந்த ஆடை திடீரென தீப்பிடித்தது.

இதனை கண்டதும் அந்த மொடல் அழகி அலறியப்படி மேடையில் அங்கும் இங்குமாக துடித்துள்ளார் . உடனே சுதாரித்து கொண்ட நிர்வாகிகள் மொடல் அழகியின் உடையில் இருந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினர்.