அனுபவம் வாய்ந்த வீரர்களைக்கொண்ட இந்திய அணியை எமது இளம் அணி வீழ்த்தியது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால்,  பந்து வீச்சாளர்களின் திறமையே வெற்றிக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது -20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உங்களால் என்ன முடியுமோ அதை முழுமையாக செய்ய முயற்சி செய்யுங்கள் என எமது இளம் வீரர்களுக்கு ஒவ்வொரு முறையும் கூறுவோம். அணியில் அனுபவம் நிறைந்த வீரர்கள் இல்லாதபட்சத்தில் இளம் வீரர்கள் தமது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகின்றனர் என்றார்.