எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கல்வித்துறை சார்ந்தவர்கள், போக்குவரத்து ஊழியர்கள்,  அரச பணியார்கள் போன்றோர் அம்பகமுவ பிரதேச செயலக காரியாலயத்தில் இன்று வாக்களித்தனர்.

பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த தபால் மூல வாக்களிப்பில் அம்பகமுவ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 150 பேர் வாக்களித்தனர்.