(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் 2015 ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான காலிறுதிச் சுற்று கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நாளையும் நாளைமறுதினமும் நடைபெறவுள்ளது.

பம்பலப்பிட்டி புனித பீட்டர் அணிக்கும் கட்டுநேரிய புனித செபெஸ்டியன் அணிக்கும் இடையிலான முதலாவது கால் இறுதிப் போட்டியும் (பிற்பகல் 2.30 மணி), நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கும் மருதானை ஸாஹிரா அணிக்கும் இடையிலான இரண்டாவது கால் இறுதிப் போட்டியும் (பிற்பகல் 4.30) இன்று நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம், இளவாளை புனித ஹென்றியரசர் அணிக்கும் கல்கிசை பரி தோமாவின் அணிக்கும் இடையிலான மூன்றாவது கால் இறுதிப் போட்டி(பிற்பகல் 2.30 மணி), களுத்துறை திருச்சிலுவை அணிக்கும் கண்டி கிங்ஸ்வூட் அணிக்கும் இடையிலான கடைசி கால் இறுதிப் போட்டி (பிற்பகல் 4.30 மணிக்கு) நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன.

அரை இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 16ஆம் திகதி 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி பெப்ரவரி 19ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.