யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தோனேசியா முதலீடுகள் செய்வதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவிடம்  எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

நீண்டகால யுத்தத்தின் காரணமாக பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையினை சீர்செய்வதற்கு சர்வதேசத்தின் உதவி தேவையாவுள்ளது. 

இதன்போது இந்தோனேசிய ஜனாதிபதி, இலங்கையின் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முன்னெடுப்புகளுக்கும் மற்றும் வளங்களை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் இந்தோனேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றார். 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவிற்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.