யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர்  நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி மருதங்கேணி தாளையடிப் பகுதியில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, விரைந்து செயற்பட்ட கடற்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். 

இதன்போது 50 பொதிகளில் கட்டப்பட்ட நிலையில் 110 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமானதென கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடற்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகளை வடக்கு கடற்படைத் தலைமை அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் பல கிலோ நிறையுடைய பல கோடி ரூபா பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.