மது போதையில் வாகனம் செலுத்தி பெண்ணை மோதிக் கொன்ற நீதிபதிக்கு பிணை

Published By: Robert

24 Jan, 2018 | 10:26 AM
image

குடிபோதையில் வாகனம் செலுத்தி, இளம் தாயொருவரின் உயிரைப் பறித்து அவரது மகளை படுகாயத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட  முன்னாள் மேல் நீதி மன்ற நீதிபதியும் தற்போதைய நீதியமைச்சின் ஆலோசகர்களில் ஒருவருமான நிமல் நம்புவசம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

Image result for பிணை

நேற்று அவர்  வாரியபொல நீதிவான் ஸ்ரீமத்தி ராஜபக் ஷ முன்னிலையில் ஆஜர்  செய்யப்பட்ட போதே அவர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

இதன்போது குறித்த முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை மூன்று மாத ங்களுக்கு ரத்து செய்த நீதிவான், அவரை கடுமையாக எச்சரித்தார். இந் நிலையில் நேற்று நீதிமன்றில் வைத்து குறித்த நீதிபதி சுயமாக, இறந்த பெண் தொடர்பில் 5 இலட்சம் ரூபாவை அவரது கணவரிடம் கையளித்தார். 

 இந்த விபத்து சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை யன்று இடம்பெற்றிருந்தது.   அனுராதபுரம் - தம்புத்தேகம பகுதியில் திருமண நிகழ்வொன்றுக்கு தனது மனைவியுடன் சென்றுள்ள முன்னாள் நீதிபதி நம்புவசம், கேகாலையில் உள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந் துள்ளார். இதன்போது பிற்பகல் 3.30 மணியளவில் வாரியபொல பொலிஸ் பிரிவின் பாதனிய - மினுவங்கெட்ட பகுதியில் அவரது கெப் வாகனம் பஸ் வண்டியொன்றினை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது வரட்சி நிவாரணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொன்டிருந்த 35 வயதான இளம் தாயையும் அவரது 17 வயதான மகளையும் முன்னாள் நீதிபதியின் கெப் மோதியுள்ளது.  அத்துடன் நிற்காமல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மூன்றினையும் மோதித்தள்ளிவிட்டு கட்டுப்பாடற்ற நிலையில் மரம் ஒன்றுடன் குறித்த கெப் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்த 35 வயதான மதூஷா சந்தமாலி எனும் தாய் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். அவரது ஒரு கால் கெப் மோதியதால் வேறாகி 10 மீற்றர்கள் வரை தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. படு காயமடைந்த அவரது மகளான  குருணாகல் உடபதவல மத்திய மகா வித்தியாலய மாணவி  பபோதா, இரு கால்களும் முற்றாக சேதமடைந்த நிலையில், குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகின்றது. மரத்துடன் மோதியதால், முன்னாள் நீதிபதி நம்புவசமும் அவரது மனைவியும் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் அவர்களும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப் வண்டியை செலுத்திய முன்னாள் நீதிபதி நம்புவசம் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் குடிபோதையில் இருந்தமை உறுதியாகியுள்ளது.  அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் நேற்று மீண்டும் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52