இரத்தினபுரி மாரப்பன பகுதியில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குடிசை ஒன்றிலிருந்து பொலிசார் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி மாரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த மாரப்பன வித்தியாலயத்தில் ஆண்டு 9 இல் கல்விகற்கும் அஞ்ஜன கவிந்து குமார (வயது14) என்ற சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(09) மாலை கொலை செய்யப்பட்ட சிறுவன் தமது வீட்டிலிருந்து தமது பாட்டியின் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். 

சிறுவன் தமது பாட்டியின் வீட்டுக்கு சென்று விட்டரா என சிறுவனின் பெற்றோர்கள் நேற்றிரவு பாட்டியின் வீட்டுக்கு தொலைபேசியின் மூலம் கேட்டபோது சிறுவன் இங்கு வரவில்லை என்று பாட்டி வீட்டிலிருந்து தகவல் கிடைத்ததையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை நேற்றிரவு முதல் தேட ஆரம்பித்தபோதே சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் குடிசையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிறுவனை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் அனில் (வயது 30) என்பவர் மேற்படி சிறுவனை சடலமாக மிட்கப்பட்ட இடத்திலிருந்து 7 கிலோ தூரத்தில் தூக்கில் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மேற்படி கொலை செய்யப்பட்ட 14 வயதுடைய அஞ்ஜன கவிந்து குமார என்ற சிறுவனின் வீட்டில் மூன்று வருட காலமாக காவத்தை பிரதேசத்தை சேர்ந்த அனில் என்பவர் தங்கிருந்து மாணிக்கக்கல் அகழ்வு தெழிலில் ஈடுபட்டு வந்தநிலையில் முரண்பட்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.