இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தா, ஜாவா தீவில் இன்று மதியம் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33 கிலோமிட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக ஆய்வு மையம் கூறுகின்றது.

நிலநடுக்கத்தினால் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.