மொனராகலையிலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்விப்பயிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

குறித்த பரிசளிப்பு விழா மொனராகலை விபுலானந்தா பாடசாலையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றது.

வலயக்கல்விப் பணிப்பளர் குணசேகர தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், பாடசாலை அதிபர் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் ஊவா தமிழ் அறிவாரியத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.