இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சில பகுதிகளில், பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகவே பொதுஜன பெரமுனவினால் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாணந்துறை, மஹியங்கனை, அகலவத்தை, மற்றும் திறப்பனை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.