மட்டக்களப்பு - ஏறாவூரில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் மாணவன் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக  தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர் இன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

ஏறாவூரிலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது  மாணவன் கடந்த சனிக்கிழமை குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரால் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர்  சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.